குறைஷியரும் அவர்களது மார்க்கத்தைப் பின்பற்றியோரும் முஸ்தலிஃபாவில் தங்குபவர்களாக இருந்தனர்; அவர்கள் ‘ஹும்ஸ்’ என்று அழைக்கப்பட்டனர். ஏனைய அரபியர்கள் அரஃபாவில் தங்குபவர்களாக இருந்தனர். இஸ்லாம் வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் அரஃபாத்திற்குச் சென்று அங்கே தங்க வேண்டுமென்றும், பிறகு அங்கிருந்து திரும்ப வேண்டுமென்றும் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் தனது நபியைக் கட்டளையிட்டான். அதுவே கண்ணியமும் மகத்துவமும் மிக்கவனின் (பின்வரும்) சொல்லாகும்:
"{சும்ம அஃபீளூ மின் ஹைஸு அஃபாளன் ன்னாஸ்}"
"(பிறகு மக்கள் எங்கிருந்து திரும்புகிறார்களோ, அங்கிருந்தே நீங்களும் திரும்புங்கள்)."