இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1297ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، جَمِيعًا عَنْ عِيسَى بْنِ يُونُسَ، - قَالَ ابْنُ خَشْرَمٍ أَخْبَرَنَا عِيسَى، - عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرًا، يَقُولُ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَرْمِي عَلَى رَاحِلَتِهِ يَوْمَ النَّحْرِ وَيَقُولُ ‏ ‏ لِتَأْخُذُوا مَنَاسِكَكُمْ فَإِنِّي لاَ أَدْرِي لَعَلِّي لاَ أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ ‏ ‏ ‏.‏
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "நஹ்ர் நாளில் நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதிருந்தவாறே (ஜம்ராக்களில்) கல்லெறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், 'உங்களுடைய ஹஜ் கிரியைகளை (நான் செய்வதைப் பார்த்து) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், எனது இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு நான் ஹஜ் செய்வேனா என்பது எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح