இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1299 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، وَابْنُ، إِدْرِيسَ عَنِ ابْنِ، جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ رَمَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْجَمْرَةَ يَوْمَ النَّحْرِ ضُحًى وَأَمَّا بَعْدُ فَإِذَا زَالَتِ الشَّمْسُ ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஹ்ர் தினத்தன்று முற்பகலில் (ளுஹா நேரத்தில்) ஜம்ராவில் கல்லெறிந்தார்கள். அதற்குப் பின்னர் (மற்ற நாட்களில்) சூரியன் (உச்சியிலிருந்து) சாய்ந்த பின்னரே (கல்லெறிந்தார்கள்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح