أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ زَهْرَةَ بْنِ مَعْبَدٍ، قَالَ حَدَّثَنِي أَبُو صَالِحٍ، مَوْلَى عُثْمَانَ قَالَ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، رضى الله عنه يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنْ أَلْفِ يَوْمٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَنَازِلِ .
உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: 'அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் ரிபாத் (எல்லைப் பகுதியைக் காவல்காப்பது), வசிப்பிடத்தில் செலவிடப்படும் ஆயிரம் நாட்களை விடச் சிறந்ததாகும்.'"
உதுமான் (ரழி) அவர்கள் மிம்பரின் மீது இருந்தபோது கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்டிருந்த ஒரு ஹதீஸை, நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவீர்களோ என்ற வெறுப்பின் காரணமாக உங்களுக்கு நான் அறிவிக்காமலிருந்தேன். பின்னர், மனிதர் தனக்குத் தோன்றியதைத் தேர்வு செய்துகொள்ளட்டும் என்பதற்காக நான் அதை உங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: 'அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் எல்லையைக் காவல்காப்பது, அது அல்லாத மற்ற இடங்களில் (தங்கும்) ஆயிரம் நாட்களைவிடச் சிறந்ததாகும்.'"
அபூ ஈஸா கூறுகிறார்கள்: இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் ஃகரீப் ஆகும்.
முஹம்மது பின் இஸ்மாயீல் கூறுகிறார்கள்: "உதுமான் (ரழி) அவர்களின் முன்னாள் அடிமையான அபூ ஸாலிஹ் என்பாரின் பெயர் துர்கான் ஆகும்."