இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7421ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ نَزَلَتْ آيَةُ الْحِجَابِ فِي زَيْنَبَ بِنْتِ جَحْشٍ وَأَطْعَمَ عَلَيْهَا يَوْمَئِذٍ خُبْزًا وَلَحْمًا وَكَانَتْ تَفْخَرُ عَلَى نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَتْ تَقُولُ إِنَّ اللَّهَ أَنْكَحَنِي فِي السَّمَاءِ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறியதாவது:

ஹிஜாப் (திரை மறைவு) பற்றிய வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் தொடர்பாகவே அருளப்பட்டது. அந்நாளில் நபி (ஸல்) அவர்கள் ரொட்டியையும் இறைச்சியையும் (விருந்தாக) அளித்தார்கள். ஸைனப் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மற்ற மனைவியரிடம் பெருமையடித்துக் கொள்வார்கள். மேலும், "அல்லாஹ் எனக்கு வானத்தில் திருமணம் முடித்து வைத்தான்" என்று கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح