அலி (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் குறைஷிகளி(ன் பெண்களி)ல் (மணமுடிக்க) தேர்ந்தெடுக்கிறீர்கள்; ஆனால் எங்களை விட்டுவிடுகிறீர்களே (ஏன்?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உங்களிடம் (நான் மணமுடிக்க) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்; ஹம்ஸா (ரழி) அவர்களின் மகள்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் எனக்கு ஹலால் (அனுமதிக்கப்பட்டவள்) அல்லள்; அவள் என் பால்குடிச் சகோதரரின் மகளாவாள்" என்று கூறினார்கள்.