இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1427 eஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالاَ أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَآنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَىَّ بَشَاشَةُ الْعُرْسِ فَقُلْتُ تَزَوَّجْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ ‏.‏ فَقَالَ ‏ ‏ كَمْ أَصْدَقْتَهَا ‏ ‏ ‏.‏ فَقُلْتُ نَوَاةً ‏.‏ وَفِي حَدِيثِ إِسْحَاقَ مِنْ ذَهَبٍ ‏.‏
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்தார்கள். (அப்போது) என்னிடம் திருமணத்தின் களையழகு இருந்தது. நான், 'அன்சாரிப் பெண்களில் ஒருவரைத் திருமணம் செய்துள்ளேன்' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'அவருக்கு எவ்வளவு மஹர் கொடுத்தீர்?' என்று கேட்டார்கள். நான், 'ஒரு பேரீச்சங்கொட்டை (எடை)' என்று பதிலளித்தேன்.'
இஸ்ஹாக் அவர்களின் அறிவிப்பில் 'தங்கத்திலிருந்து' என்று இடம்பெற்றுள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح