ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களுக்கு வஸிய்யத் செய்தார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள்,1 ஆனால், அவர்கள் (தமது இறுதி நேரத்தில்) சிறுநீர் கழிப்பதற்காக ஒரு பாத்திரத்தைக் கொண்டுவருமாறு கேட்டார்கள், பின்னர் திடீரென அவர்களின் உடல் தளர்ந்துவிட்டது (மரணித்துவிட்டார்கள்), அப்படியிருக்க, அவர்கள் எப்படி வஸிய்யத் செய்திருக்க முடியும்?!"
ஷெய்க் அவர்கள் கூறினார்கள்: அஸ்ஹர் (அறிவிப்பாளர்களில் ஒருவர்) என்பவர் இப்னு ஸஃத் அஸ்-ஸம்மான் ஆவார். 1 அதாவது, அவரை கலீஃபாவாக நியமிப்பது.