இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2540சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ لَمَّا فَتَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَكَّةَ قَامَ خَطِيبًا فَقَالَ فِي خُطْبَتِهِ ‏ ‏ لاَ يَجُوزُ لاِمْرَأَةٍ عَطِيَّةٌ إِلاَّ بِإِذْنِ زَوْجِهَا ‏ ‏ ‏.‏ مُخْتَصَرٌ ‏.‏
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோது, எழுந்து நின்று மக்களுக்கு உரை நிகழ்த்தி, தமது குத்பாவில் கூறினார்கள்; 'ஒரு பெண் தன் கணவனின் அனுமதியின்றி எதையும் கொடுப்பது ஆகுமானதல்ல.'" (இதை அவர் சுருக்கமாக அறிவித்தார்கள்).

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
3547சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ يَجُوزُ لاِمْرَأَةٍ عَطِيَّةٌ إِلاَّ بِإِذْنِ زَوْجِهَا ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன் கணவனின் அனுமதியின்றி (அவனுடைய சொத்திலிருந்து) அன்பளிப்பு வழங்குவது ஆகுமானதல்ல.

ஹதீஸ் தரம் : ஹஸன் ஸஹீஹ் (அல்பானி)
حسن صحيح (الألباني)