அபூ பக்ரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
இரண்டு முஸ்லிம்கள் (ஒருவரையொருவர் எதிர்கொள்ளும்போது) அவர்களில் ஒருவர் தமது சகோதரரை ஆயுதத்தால் தாக்கினால், அவர்கள் இருவரும் நரக நெருப்பின் விளிம்பில் இருக்கின்றார்கள். மேலும் அவர்களில் ஒருவர் தமது தோழரைக் கொன்றுவிட்டால், அவர்கள் இருவரும் நரக நெருப்பில் புகுவார்கள்.