அபூ பக்ரா (ரழி) அவர்கள் வாயிலாக அஹ்னஃப் பின் கைஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என அறிவித்தார்கள்:
இரு முஸ்லிம்கள் தங்களின் வாள்களுடன் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும்போது, கொன்றவரும் கொல்லப்பட்டவரும் ஆகிய இருவரும் நரக நெருப்புக்கு உரியவர்கள் ஆவார்கள்.