அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் என் பெற்றோரை அழவிட்டு வந்திருந்தபோதிலும், ஹிஜ்ரத் செய்வதற்காக தங்களிடம் உடன்படிக்கை செய்ய வந்துள்ளேன்' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'நீர் அவர்களிடம் திரும்பிச் சென்று, நீர் அவர்களை எப்படி அழச்செய்தீரோ, அவ்வாறே சிரிக்க வையும்' என்றார்கள்."