உமைமா பின்த் ருகைகா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நான் வேறு சில பெண்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்வதற்காகச் சென்றேன். அவர் எங்களிடம், ‘உங்களால் இயன்றவற்றிலும், உங்கள் சக்திக்குட்பட்டவற்றிலும் (உள்ள நிபந்தனைகளின் மீது நான் பைஅத்தை ஏற்றுக்கொள்கிறேன்). நிச்சயமாக நான் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை’ என்று கூறினார்கள்.”