இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7202ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا إِذَا بَايَعْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ يَقُولُ لَنَا ‏ ‏ فِيمَا اسْتَطَعْتَ ‏ ‏‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, (அவர்களின் கட்டளைகளைச்) செவியேற்று, (அவற்றுக்குக்) கீழ்ப்படிவோம் என்று விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தபோதெல்லாம், அவர்கள் எங்களுக்கு, "உங்களால் முடிந்த அளவுக்கு (மட்டுமே)" என்று கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
56 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ، قَالاَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ سَيَّارٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَرِيرٍ، قَالَ بَايَعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فَلَقَّنَنِي ‏ ‏ فِيمَا اسْتَطَعْتَ ‏ ‏ ‏.‏ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ ‏.‏ قَالَ يَعْقُوبُ فِي رِوَايَتِهِ قَالَ حَدَّثَنَا سَيَّارٌ ‏.‏
ஜரீர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், (அவர்களுடைய கட்டளைகளைச்) செவியேற்பதாகவும், அவற்றுக்குக் கீழ்ப்படிவதாகவும் பைஅத் செய்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், (இந்த பைஅத்) 'உன்னால் இயன்ற வரையில் (மட்டுமே)' என்றும், 'ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உளத்தூய்மையுடன் நலம் நாட வேண்டும்' என்றும் எனக்கு அறிவுறுத்தினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1867ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ - وَاللَّفْظُ لاِبْنِ أَيُّوبَ - قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ كُنَّا نُبَايِعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ يَقُولُ لَنَا ‏ ‏ فِيمَا اسْتَطَعْتَ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செவிமடுப்பதாகவும், கீழ்ப்படிவதாகவும் உறுதிமொழி அளிப்பது வழக்கம். அப்போது அவர்கள் (ஸல்) எங்களிடம், "உம்மால் இயன்றவற்றில்" என்று கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح