حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ قَرَصَتْ نَمْلَةٌ نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ، فَأَمَرَ بِقَرْيَةِ النَّمْلِ فَأُحْرِقَتْ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَحْرَقْتَ أُمَّةً مِنَ الأُمَمِ تُسَبِّحُ اللَّهِ.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்: 'நபிமார்களில் ஒருவரை ஒரு எறும்பு கடித்தது. அதனால் அவர் எறும்புகளின் வசிப்பிடத்தை (அதாவது, எறும்புக் கூட்டத்தை) எரித்துவிடும்படி உத்தரவிட்டார். ஆகவே, அல்லாஹ் அவருக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவித்தான்: 'உம்மை ஒரு எறும்பு கடித்ததற்காகவா, அல்லாஹ்வைத் துதி செய்யும் சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தை நீர் எரித்துவிட்டீர்?'
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நபிமார்களில் ஒருவரை ஓர் எறும்பு கடித்துவிட்டது. உடனே அவர், அந்த எறும்புகளின் இருப்பிடத்தை (அதாவது, எறும்புக் கூட்டத்தை) (எரிக்குமாறு) கட்டளையிட்டார்; அவ்வாறே அது எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவித்தான்: ‘ஓர் எறும்பு உம்மைக் கடித்ததற்காக, (இறைவனைத்) துதி செய்யும் சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தையே நீர் அழித்துவிட்டீரே!’”