உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு சில குர்பானி பிராணிகளை (ஈதுல் அள்ஹா பெருநாளில் அறுக்கப்படுவதற்காக) பங்கிட்டுக் கொடுத்தார்கள். உக்பா (ரழி) அவர்களின் பங்கிற்கு ஒரு ‘ஜத்ஆ’ (ஆறு மாத ஆடு) கிடைத்தது. உக்பா (ரழி) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! என் பங்கிற்கு ஒரு ‘ஜத்ஆ’ (ஆறு மாதச் செம்மறியாட்டுக் குட்டி) கிடைத்திருக்கிறது.” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அதையே குர்பானி கொடுங்கள்.”