இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4408சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ الْقِتْبَانِيِّ، عَنْ شُيَيْمِ بْنِ بَيْتَانَ، وَيَزِيدَ بْنِ صُبْحٍ الأَصْبَحِيِّ، عَنْ جُنَادَةَ بْنِ أَبِي أُمَيَّةَ، قَالَ كُنَّا مَعَ بُسْرِ بْنِ أَرْطَاةَ فِي الْبَحْرِ فَأُتِيَ بِسَارِقٍ يُقَالُ لَهُ مِصْدَرٌ قَدْ سَرَقَ بُخْتِيَّةً فَقَالَ قَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ لاَ تُقْطَعُ الأَيْدِي فِي السَّفَرِ ‏ ‏ ‏.‏ وَلَوْلاَ ذَلِكَ لَقَطَعْتُهُ ‏.‏
புஸ்ர் இப்னு அர்தாத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஜுனாதா இப்னு அபீஉமைய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் கடலில் (ஒரு போர்ப் பயணத்தில்) புஸ்ர் இப்னு அர்தாத் (ரழி) அவர்களுடன் இருந்தோம். பக்தீ வகைப் பெண் ஒட்டகத்தைத் திருடியிருந்த மிஸ்தர் என்றழைக்கப்பட்ட ஒரு திருடன் கொண்டுவரப்பட்டான். அவர் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'போர்ப் பயணத்தின் போது கைகள் வெட்டப்படக் கூடாது' என்று கூற நான் செவியேற்றேன். அவ்வாறு இல்லாதிருந்தால், நான் அவனது கையை வெட்டியிருப்பேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)