இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

391ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْمَهْدِيِّ، قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ سَعْدٍ، عَنْ مَيْمُونِ بْنِ سِيَاهٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ صَلَّى صَلاَتَنَا، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَذَلِكَ الْمُسْلِمُ الَّذِي لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ، فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ ‏ ‏‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் நமது தொழுகையைத் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுக்கும் பிராணிகளை உண்கிறாரோ அவரே அந்த முஸ்லிம். அவருக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பும் (பாதுகாப்பு ஒப்பந்தமும்), அவனது தூதரின் பாதுகாப்பும் (பாதுகாப்பு ஒப்பந்தமும்) உண்டு. எனவே, அல்லாஹ்வின் பாதுகாப்பு விஷயத்தில் (அந்த ஒப்பந்தத்தை மீறி) நீங்கள் அல்லாஹ்வுக்குத் துரோகம் செய்யாதீர்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح