இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1902சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اعْتَمَرَ فَطَافَ بِالْبَيْتِ وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ وَمَعَهُ مَنْ يَسْتُرُهُ مِنَ النَّاسِ فَقِيلَ لِعَبْدِ اللَّهِ أَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْكَعْبَةَ قَالَ لاَ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு அபீ அவஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா செய்தார்கள்; (கஃபாவாகிய) இறையில்லத்தை வலம் வந்தார்கள்; மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களுடன் ஏராளமான மக்கள் இருந்ததால், அண்ணல் அவர்கள் அம்மக்களால் மறைக்கப்பட்டிருந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அபீ அவஃபா (ரழி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவிற்குள் நுழைந்தார்களா?" என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள் "இல்லை" என்று பதிலளித்தார்கள்.

ஹதீஸ் தரம் : சஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிம் வாசகத்தில் மட்டும் (அல்பானி)
صحيح خ ولـ م جملة الدخول فقط (الألباني)