அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஒரு சிறுவனின் தலையின் ஒரு பகுதி மழிக்கப்பட்டும், மற்றொரு பகுதி மழிக்கப்படாமல் விடப்பட்டும் இருந்ததைக் கண்டார்கள். அவ்வாறு செய்வதை அவர்களுக்குத் தடைசெய்து, "அதை முழுவதுமாக மழித்துவிடுங்கள் அல்லது முழுவதுமாக விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள்.