அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யமன் மூலை மற்றும் ஹஜருல் அஸ்வத் (கறுப்புக்கல்) ஆகிய இந்த இரண்டு மூலைகளையும் (தவாஃபின் போது) தொடுவதை நான் கண்டதிலிருந்து, (எந்தச்) சிரமமான நிலையிலும் சரி, (எந்தச்) சுலபமான நிலையிலும் சரி, அவற்றை (அவ்வாறு) தொடுவதை நான் ஒருபோதும் விட்டதில்லை.”