அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் குங்குமப்பூச் சாயமிடப்பட்ட இரண்டு ஆடைகளை அணிந்திருந்ததை கண்டார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: “இவை நிராகரிப்பாளர்கள் (வழக்கமாக அணியும்) ஆடைகளாகும்; எனவே, இவற்றை அணியாதீர்கள்.”