இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

137 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، - قَالَ أَخْبَرَنَا الْعَلاَءُ، - وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى الْحُرَقَةِ - عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ السَّلَمِيِّ، عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ ‏"‏ ‏.‏ فَقَالَ لَهُ رَجُلٌ وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ ‏"‏ ‏.‏
அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"எவர் ஒரு முஸ்லிமின் உரிமையை தனது (பொய்யான) சத்தியத்தின் மூலம் அபகரித்துக் கொண்டாரோ, அவருக்கு அல்லாஹ் நரக நெருப்பைக் கட்டாயமாக்கிவிட்டான்; மேலும் சுவர்க்கத்தை அவருக்குத் தடைசெய்துவிட்டான்."

அப்போது ஒரு மனிதர் அவரிடம், "அல்லாஹ்வின் தூதரே! அது மிக அற்பமான பொருளாக இருந்தாலும் கூடவா?" என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், "(ஆம்) அது 'அராக்' மரத்தின் ஒரு குச்சியாக இருந்தாலும் சரியே" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح