அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்வார்கள்: "அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃகலபதித் தய்ன், வ ஃகலபத்தில் அதுவ்வி, வ ஷமாதத்தில் அஃதாஇ. (யா அல்லாஹ், கடன் மிகைத்து விடுவதிலிருந்தும், எதிரி என்னை வென்று விடுவதிலிருந்தும், என் துன்பத்தைக் கண்டு எதிரிகள் மகிழ்ச்சியடைவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)"
وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ عُمَرَ -رَضِيَ اَللَّهُ عَنْهُمَا- قَالَ: { كَانَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -يَقُولُ: اَللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ اَلدَّيْنِ, وَغَلَبَةِ اَلْعَدُوِّ, وَشَمَاتَةِ اَلْأَعْدَاءِ } رَوَاهُ النَّسَائِيُّ, وَصَحَّحَهُ اَلْحَاكِمُ . [1] .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யா அல்லாஹ்! கடன்களின் சுமையிலிருந்தும், மனிதர்கள் என்னை மிகைப்பதிலிருந்தும், (எனக்கு ஏற்படும் தீங்கைக் கண்டு) எதிரிகள் மகிழ்ச்சியடைவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.”