இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1702ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَفْتِلُ الْقَلاَئِدَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَيُقَلِّدُ الْغَنَمَ، وَيُقِيمُ فِي أَهْلِهِ حَلاَلاً‏.‏
`ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:`
நான் நபி (ஸல்) அவர்களின் ஹதீகளுக்கு (பலியிடப்படும் பிராணிகளுக்கு) மாலைகள் தொடுப்பது வழக்கம். அவர்கள் (அந்த மாலைகளால்) ஆடுகளுக்குக் கழுத்திலணிவிப்பார்கள். மேலும் அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் இஹ்ராம் அணியாதவராக தங்கியிருப்பார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3096சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَهْدَى رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَرَّةً غَنَمًا إِلَى الْبَيْتِ فَقَلَّدَهَا ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற்கு ஆடுகளை அனுப்பி, அவற்றுக்கு மாலை அணிவித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)