حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، وَعَبْدُ الْكَرِيمِ الْجَزَرِيُّ، أَنَّ مُجَاهِدًا، أَخْبَرَهُمَا أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى أَخْبَرَهُ أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَهُ أَنْ يَقُومَ عَلَى بُدْنِهِ، وَأَنْ يَقْسِمَ بُدْنَهُ كُلَّهَا، لُحُومَهَا وَجُلُودَهَا وَجِلاَلَهَا، وَلاَ يُعْطِيَ فِي جِزَارَتِهَا شَيْئًا.
அலி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள், புத்ன் (ஹதீ ஒட்டகங்களை) அறுப்பதை மேற்பார்வையிடவும், அவற்றின் இறைச்சி, தோல்கள் மற்றும் அவற்றைப் போர்த்தும் துணிகளை தர்மமாக பங்கிடவும், அறுத்ததற்கான கூலியாக (அவற்றின் உடலிலிருந்து) எதையும் கசாப்புக்காரருக்குக் கொடுக்கக் கூடாது என்றும் எனக்கு உத்தரவிட்டார்கள்.