இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மக்கள் இறையில்லத்தை இறுதியாக வலம் வருமாறு (தவாஃபுல் விதாச் செய்யுமாறு) (நபி (ஸல்) அவர்களால்) கட்டளையிடப்பட்டார்கள், ஆனால் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அதிலிருந்து விலக்களிக்கப்பட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், ‘மக்கள் கஃபாவைச் சுற்றி தவாஃப் செய்வதை தங்களின் இறுதிச் செயலாக ஆக்குமாறு கட்டளையிடப்பட்டார்கள்; (விடைபெறும் தவாஃப்) ஆனால் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.’