இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1125 dஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُ بِصِيَامِهِ قَبْلَ أَنْ يُفْرَضَ رَمَضَانُ فَلَمَّا فُرِضَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَ يَوْمَ عَاشُورَاءَ وَمَنْ شَاءَ أَفْطَرَ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆஷூரா) நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தார்கள். ரமளான் (நோன்பு) கடமையாக்கப்பட்டபோது, ஆஷூரா அன்று நோன்பு நோற்க விரும்பியவர் நோற்றார், விரும்பாதவர் நோற்கவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح