இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1129 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، خَطِيبًا بِالْمَدِينَةِ - يَعْنِي فِي قَدْمَةٍ قَدِمَهَا - خَطَبَهُمْ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ أَيْنَ عُلَمَاؤُكُمْ يَا أَهْلَ الْمَدِينَةِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِهَذَا الْيَوْمِ ‏ ‏ هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يَكْتُبِ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ وَأَنَا صَائِمٌ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَ فَلْيَصُمْ وَمَنْ أَحَبَّ أَنْ يُفْطِرَ فَلْيُفْطِرْ ‏ ‏ ‏.‏
ஹுமைத் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா பின் அபூ சுஃப்யான் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்திருந்தபோது (அங்கு) சொற்பொழிவாளராக (நின்று) ஆஷூரா நாளன்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், "மதீனாவாசிகளே! உங்கள் அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நாள் பற்றிக் கூறுவதை நான் கேட்டுள்ளேன்: 'இது ஆஷூரா நாளாகும். இந்த நாளில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கவில்லை. ஆனால் நான் நோன்பு நோற்றுள்ளேன். ஆகவே, உங்களில் யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்! யார் (நோன்பை) விட்டுவிட விரும்புகிறாரோ அவர் விட்டுவிடட்டும்!'" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
668முவத்தா மாலிக்
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، يَوْمَ عَاشُورَاءَ عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِهَذَا الْيَوْمِ ‏ ‏ هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يُكْتَبْ عَلَيْكُمْ صِيَامُهُ وَأَنَا صَائِمٌ فَمَنْ شَاءَ فَلْيَصُمْ وَمَنْ شَاءَ فَلْيُفْطِرْ ‏ ‏ ‏.‏
முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரழி) அவர்கள் ஹஜ் செய்த வருடத்தில், ஆஷூரா நாளன்று, மிம்பரில் இருந்தவாறு (மக்களிடம்) கூறியதாவது:

"மதீனாவின் மக்களே, உங்கள் அறிஞர்கள் எங்கே? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நாளைப் பற்றிக் கூறியதை கேட்டேன்: 'இது ஆஷூரா நாள். மேலும், இதில் நோன்பு நோற்பது உங்கள் மீது கடமையாக்கப்படவில்லை. நான் (இன்று) நோன்பு நோற்கிறேன். எனவே, உங்களில் யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் நோற்கலாம், யார் (நோன்பு) விரும்பவில்லையோ, அவர் நோற்க வேண்டியதில்லை.'"