حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ كَانَ لاَ يَأْكُلُ إِلاَّ مِنْ عَمَلِ يَدِهِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "தாவூத் நபி (அலை) அவர்கள் தம் கையால் உழைத்த வருமானத்திலிருந்தே தவிர உண்ண மாட்டார்கள்."
وعن المقدام بن معد يكرب رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال: ما أكل أحد طعاماً قط خيراً من أن يأكل من عمل يده، وإن نبى الله دواد صلى الله عليه وسلم كان يأكل من عمل يده . ((رواه البخاري)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு மனிதன் தன் கையால் உழைத்து உண்பதை விட சிறந்த எந்த உணவையும் அவன் உண்பதில்லை. அல்லாஹ்வின் நபியான தாவூத் (அலை) அவர்கள், தம் கையால் உழைத்துச் சம்பாதித்ததிலிருந்தே சாப்பிட்டார்கள்."