இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1029 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصٌ، - يَعْنِي ابْنَ غِيَاثٍ - عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، - رضى الله عنها - قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أَنْفِقِي - أَوِ انْضَحِي أَوِ انْفَحِي - وَلاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ ‏ ‏ ‏.‏
அபூபக்ர் (ரழி) அவர்களின் மகளான அஸ்மா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: செலவிடு, கணக்கிடாதே, இல்லையெனில் அல்லாஹ்வும் உனது விஷயத்தில் கணக்கிடுவான்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1029 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنْ أَبِي، مُعَاوِيَةَ - قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، - حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عَبَّادِ بْنِ حَمْزَةَ، وَعَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ انْفَحِي - أَوِ انْضَحِي أَوْ أَنْفِقِي - وَلاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ وَلاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ ‏ ‏ ‏.‏
அஸ்மா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர்களிடம்) கூறினார்கள்:
(நீ பிறருக்குக்) கொடு; அதனை எண்ணிக் கணக்கிடாதே. (அவ்வாறு நீ கணக்கிட்டால்) அல்லாஹ்வும் உனக்கு (வழங்கும்போது) கணக்கிடுவான். மேலும் (செல்வத்தைப்) பதுக்கி வைக்காதே. (அவ்வாறு நீ செய்தால்) அல்லாஹ் உனக்கு (வழங்குவதை) தடுத்து விடுவான்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2550சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ، عَنْ عَبْدَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا ‏ ‏ لاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكِ ‏ ‏ ‏.‏
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது: நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்:

"நீ கொடுப்பதை எண்ணிப் பார்க்காதே, அவ்வாறு செய்தால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், உனக்கு வழங்குவதைக் கணக்கிடுவான்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)