وعن أم المؤمنين ميمونة بنت الحارث رضي الله عنها أنها أعتقت وليدة ولم تستأذن النبي صلى الله عليه وسلم، فلما كان يومها الذي يدور عليها فيه، قالت: أشعرت يا رسول الله أني أعتقت وليدتي؟ قال: "أو فعلت؟" قالت: نعم.
قال: "أما إنك لو أعطيتها أخوالك كان أعظم لأجرك" ((متفق عليه)).
மைமூனா பின்த் அல்-ஹாரித் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் அனுமதியின்றி ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
(நபியவர்களை சந்திக்கும்) அவர்களுடைய முறை வந்தபோது, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ அவ்வாறு செய்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், "நீ அவளை உனது தாய்மாமன்களுக்குக் கொடுத்திருந்தால், உனக்கு அதிக நற்கூலி கிடைத்திருக்கும்" என்று குறிப்பிட்டார்கள்.