அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எங்களுக்கு எவரேனும் செய்த உதவிக்கு நாங்கள் கைம்மாறு செய்துவிட்டோம்; அபூபக்ர் (ரழி) அவர்களைத் தவிர. நிச்சயமாக, அவர் எங்களுக்குச் செய்த ஓர் உபகாரம் இருக்கிறது; அதற்கு மறுமை நாளில் அல்லாஹ் அவருக்குப் பிரதிபலன் அளிப்பான். அபூபக்ர் (ரழி) அவர்களின் செல்வம் எனக்குப் பயனளித்ததைப் போல வேறு எவருடைய செல்வமும் எனக்குப் பயனளிக்கவில்லை. நான் ஒரு கலீலை (நெருங்கிய நண்பரை) ஏற்படுத்திக் கொள்வதாக இருந்தால், அபூபக்ர் (ரழி) அவர்களையே கலீலாக ஏற்படுத்திக் கொண்டிருப்பேன். மேலும், நிச்சயமாக உங்கள் தோழர் அல்லாஹ்வின் கலீல் ஆவார்."