இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

331ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، قَالَ بَلَغَ عَائِشَةَ أَنَّ عَبْدَ، اللَّهِ بْنَ عَمْرٍو يَأْمُرُ النِّسَاءَ إِذَا اغْتَسَلْنَ أَنْ يَنْقُضْنَ رُءُوسَهُنَّ فَقَالَتْ يَا عَجَبًا لاِبْنِ عَمْرٍو هَذَا يَأْمُرُ النِّسَاءَ إِذَا اغْتَسَلْنَ أَنْ يَنْقُضْنَ رُءُوسَهُنَّ أَفَلاَ يَأْمُرُهُنَّ أَنْ يَحْلِقْنَ رُءُوسَهُنَّ لَقَدْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ وَلاَ أَزِيدُ عَلَى أَنْ أُفْرِغَ عَلَى رَأْسِي ثَلاَثَ إِفْرَاغَاتٍ ‏.‏
உபைத் இப்னு உமைர் அறிவித்தார்கள்:

பெண்கள் குளிக்கும்போது தங்கள் தலை(முடிப் பின்னல்களை) அவிழ்த்துவிட வேண்டும் என்று அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கட்டளையிடுவதாக ஆயிஷா (ரலி) அவர்களுக்குச் செய்தி எட்டியது.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "இந்த இப்னு அம்ரை நினைத்து ஆச்சரியமாக இருக்கிறது! பெண்கள் குளிக்கும்போது தங்கள் தலை(முடிப் பின்னல்களை) அவிழ்த்துவிட வேண்டும் என்று இவர் கட்டளையிடுகிறாரே? (அப்படியானால்) அவர்கள் தங்கள் தலைகளை மழித்துக்கொள்ள வேண்டும் என்றும் இவர் கட்டளையிட்டிருக்கலாமே! நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். என் தலையின் மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றுவதைத் தவிர (வேறெதையும்) நான் அதிகப்படுத்தியதில்லை."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3அன்-நவவியின் 40 ஹதீஸ்கள்
وَعَنْ أَبِي أُمَامَةَ اَلْبَاهِلِيِّ ‏- رضى الله عنه ‏- قَالَ: قَالَ رَسُولُ ‏- صلى الله عليه وسلم ‏-{ إِنَّ اَلْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ, إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ, وَلَوْنِهِ } أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ [1]‏ وَضَعَّفَهُ أَبُو حَاتِمٍ [2]‏ .‏
அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நிச்சயமாகத் தண்ணீரை எதுவும் அசுத்தப்படுத்தாது; அதன் வாசனை, அதன் சுவை மற்றும் அதன் நிறம் ஆகியவற்றை (ஏதேனும் அசுத்தம்) மிகைத்து (மாற்றி) விட்டாலே தவிர.”
இதை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார். அபூ ஹாதிம் இதனை ‘ளயீஃப்’ (பலவீனமானது) எனக் குறிப்பிட்டுள்ளார்.