ஹிஷாம் பின் உர்வா அவர்கள் தனது தந்தை வழியாக அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் பின் அர்கம் (ரழி) அவர்கள் தனது தோழர்களுக்கு தொழுகை நடாத்துபவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் தொழுகைக்கான நேரம் வந்தபோது, அவர்கள் மலஜலம் கழிப்பதற்காகச் சென்றுவிட்டு, பிறகு திரும்பி வந்து கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'உங்களில் ஒருவருக்கு மலம் கழிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அவர் தொழுவதற்கு முன், முதலில் அதை நிறைவேற்றிக்கொள்ளட்டும்' என்று கூறக் கேட்டேன்."