இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் அமர்ந்தால், தம்முடைய இரு கைகளையும் தம்முடைய இரு முழங்கால்களின் மீது வைப்பார்கள். பெருவிரலுக்கு அடுத்துள்ள தமது வலது விரலை உயர்த்தி, அதைக் கொண்டு (சுட்டிக் காட்டி) துஆச் செய்வார்கள். தமது இடது கையை இடது முழங்காலின் மீது விரித்து வைப்பார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் அமர்ந்தபோது, தமது கைகளைத் தமது முழங்கால்கள் மீது வைத்து, பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலை உயர்த்தி, அதன் மூலம் (அல்லாஹ்வைச் சுட்டிக்காட்டி) பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்களுடைய இடது கை தமது முழங்காலின் மீது விரிக்கப்பட்டிருந்தது.