அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லா திசையில் சளியைக் கண்டார்கள். உடனே மக்களை நோக்கித் திரும்பி, "உங்களில் ஒருவருக்கு என்ன நேர்ந்தது? (அவர்) தம் இறைவனை முன்னோக்கி நிற்கும் நிலையில் தமக்கு முன்னால் துப்புகிறாரே! உங்களில் யாரேனும் ஒருவர், (மற்றொருவர்) தம்மை முன்னோக்கி (நின்று) தமது முகத்தில் துப்புவதை விரும்புவாரா? எனவே, உங்களில் யாரேனும் துப்பவேண்டியிருந்தால் தம் இடது பக்கத்தில், தம் பாதத்திற்கு அடியில் துப்பட்டும். அவ்வாறு (துப்ப இடம்) கிடைக்காவிட்டால், அவர் இவ்வாறு செய்யட்டும்" என்று கூறினார்கள். (இதை விவரித்த) காஸிம், தமது ஆடையில் துப்பி, பிறகு அதன் ஒரு பகுதியை மறுபகுதியோடு வைத்துத் தேய்த்துக் காட்டினார்கள்.