மக்களிலேயே மிகவும் அழகான ஒரு பெண், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுது வந்தார். மக்களில் சிலர் அவளைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக முதல் வரிசைக்கு முன்சென்றுவிடுவார்கள். வேறு சிலர் கடைசி வரிசையில் நிற்கும் வரை பின்தங்கிவிடுவார்கள். (அவர்களில் ஒருவர்) ருகூஃ செய்யும்போது தன் அக்குளுக்குக் கீழால் (அப்பெண்ணைப்) பார்ப்பார். அப்போது அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) அருளினான்: