அலி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது, "அல்லாஹும்ம லக ஸஜத்து, வ லக அஸ்லம்து, வ பிக ஆமன்து, ஸஜத வஜ்ஹி லில்லதீ கலகஹு வ ஸவ்வரஹு ஃப அஹ்ஸன ஸூரதஹு வ ஷக்க ஸம்அஹு வ பஸரஹு, தபாரகல்லாஹு அஹ்ஸனுல் காலிகீன் (யா அல்லாஹ்! உனக்கே நான் ஸஜ்தாச் செய்தேன்; உன்னிடமே நான் சரணடைந்தேன்; உன்னையே நான் நம்பினேன். என் முகத்தைப் படைத்து, அதை வடிவமைத்து, அதன் வடிவத்தை அழகுபடுத்தி, அதன் செவியையும் பார்வையையும் பிளந்தவனுக்கே என் முகம் ஸஜ்தாச் செய்துவிட்டது. படைப்பாளர்களில் மிக அழகான படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியமிக்கவன்.)" என்று கூறுவார்கள்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது சஜ்தாவில் கூறுவார்கள்: "அல்லாஹும்ம லக ஸஜத்து, வ பிக ஆமன்து, வ லக அஸ்லம்து, வ அன்த ரப்பீ! ஸஜத வஜ்ஹீ லில்லதீ ஃகலகஹு வ ஸவ்வரஹு, வ ஷக்க ஸம்அஹு வ பஸரஹு, தபாரகல்லாஹு அஹ்ஸனுல் ஃகாலிகீன்." (அல்லாஹ்வே! உனக்கே நான் சஜ்தா செய்தேன்; உன்னையே நான் ஈமான் கொண்டேன்; உனக்கே நான் (முழுமையாக) அடிபணிந்தேன்; நீயே என் இறைவன். என் முகம், அதைப் படைத்து, அதை வடிவமைத்து, அதன் செவியையும் பார்வையையும் (அதற்கான துவாரங்களைப்) பிளந்து அமைத்தவனுக்கு சஜ்தா செய்தது. படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனான அல்லாஹ் பாக்கியமிக்கவன்.)