அபூ ஹுரைரா (ரலி) மற்றும் ஹுதைஃபா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
"நமக்கு முன்னிருந்தவர்களை அல்லாஹ் ஜுமுஆ (வெள்ளிக்கிழமை)விலிருந்து திசைதிருப்பினான். எனவே யூதர்களுக்குச் சனிக்கிழமையும், கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் அமைந்தன. பிறகு அல்லாஹ் நம்மைக் கொண்டுவந்தான்; நமக்கு ஜுமுஆ நாளுக்கான நல்வழியைக் காட்டினான். அவன் வெள்ளிக்கிழமையையும், சனிக்கிழமையையும், ஞாயிற்றுக்கிழமையையும் ஆக்கினான். இவ்வாறே அவர்கள் (யூதர்களும் கிறிஸ்தவர்களும்) மறுமை நாளில் நமக்குப்பின் வருவார்கள். நாம் இவ்வுலக மக்களில் கடைசியானவர்கள்; மேலும் மறுமை நாளில் ஏனைய படைப்பினங்களுக்கு முன்பாகவே தீர்ப்பளிக்கப்படுபவர்களில் முதலானவர்கள் ஆவோம்."
வாஸில் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கப்படும்' என்று உள்ளது.
அபூஹுரைரா (ரலி) மற்றும் ஹுதைஃபா (ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நமக்கு முன் வந்தவர்களை வெள்ளிக்கிழமையிலிருந்து அல்லாஹ் (அதன் சிறப்பை அறியாமல்) வழிதவறச் செய்தான் (அல்லது வெள்ளிக்கிழமையின் சிறப்பிற்கு அவர்களை வழிகாட்டவில்லை). எனவே யூதர்களுக்கு சனிக்கிழமையும் கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் ஆனது. பின்னர், கண்ணியமும் வல்லமையும் மிக்க அல்லாஹ் நம்மைக் கொண்டு வந்து வெள்ளிக்கிழமைக்கு நமக்கு வழிகாட்டினான். எனவே (முஸ்லிம்களுக்குரிய சிறப்பு நாளாக) வெள்ளியையும், (யூதர்களுக்குரிய) சனியையும், (கிறிஸ்தவர்களுக்குரிய) ஞாயிறையும் (வரிசைப்படுத்தினான்). இவ்வாறே மறுமை நாளில் அவர்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாக இருப்பார்கள். நாம் இவ்வுலக மக்களின் கடைசியானவர்கள்; ஆனால் மறுமை நாளில் மற்ற எல்லா படைப்பினங்களுக்கும் முன்பாக தீர்ப்பு வழங்கப்படும் முதலாவதாக இருப்போம்."