அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து (நேரத்) தொழுகைகளும், ஒரு ஜும்ஆவிலிருந்து அடுத்த ஜும்ஆ வரையும் (அவற்றுக்கிடையே நிகழும்) பெரும் பாவங்கள் (செய்யப்படாமல்) தவிர்க்கப்பட்டால், அவற்றுக்கு இடையில் (நிகழும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும்.