இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1231ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ الْهِلاَلِيُّ، قَالاَ حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، الْمُهَلَّبِيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، - فِي رِوَايَةِ يَحْيَى - قَالَ أَهْلَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحَجِّ مُفْرَدًا وَفِي رِوَايَةِ ابْنِ عَوْنٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَهَلَّ بِالْحَجِّ مُفْرَدًا ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ் முஃப்ரத் (தனி ஹஜ்) செய்வதற்காக இஹ்ராம் பூண்டோம்.
இப்னு அவ்ன் அவர்களின் அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் முஃப்ரத் (தனி ஹஜ்) செய்வதற்காக இஹ்ராம் பூண்டார்கள்" என்று வந்துள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1399 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ، عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குபாவிற்கு வாகனத்திலும் நடந்தும் வருவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1686சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الأَخْنَسِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُوتِرُ عَلَى الرَّاحِلَةِ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தின் போது) தமது வாகனத்தின் மீது வித்ரு தொழுபவர்களாக இருந்தார்கள் (வாகனம் செல்லும் திசையை நோக்கியவாறு).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)