நபியவர்களின் தோழரான அபூ அல்-ஜஃத் அத்-தமரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் அலட்சியத்தின் காரணமாக மூன்று ஜுமுஆக்களை (தொடர்ச்சியாக) விட்டுவிடுகிறாரோ, அல்லாஹ் அவனுடைய இதயத்தின் மீது முத்திரையிட்டு விடுவான்."
அபூ அல்-ஜஅத் அத்-தம்ரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். (முஹம்மத் பின் அம்ரின் கூற்றுப்படி இவர் ஒரு நபித்தோழர் ஆவார்):
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எவர் ஜுமுஆத் தொழுகையை அலட்சியமாக மூன்று முறை விட்டுவிடுகிறாரோ, அல்லாஹ் அவருடைய இதயத்தின் மீது முத்திரையிட்டு விடுகிறான்.'"