அபூதர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'நபி (ஸல்) அவர்கள் விடியற்காலை வரை (இரவுத் தொழுகையில்) ஒரேயொரு வசனத்தை ஓதியவாறே நின்றார்கள். அந்த வசனம்: 'இன் துஅத்திப்ஹும் ஃபஇன்னஹும் இபாதுக்க, வஇன் தக்ஃபிர் லஹும் ஃபஇன்னக்க அன்த்தல் அஸீஸுல் ஹக்கீம்' (இதன் பொருள்: 'நீ அவர்களைத் தண்டித்தால், அவர்கள் உன்னுடைய அடியார்களே; நீ அவர்களை மன்னித்துவிட்டால், நிச்சயமாக நீயே யாவரையும் மிகைத்தவன்; மகா ஞானமுடையவன்.')