இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

377ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا أَبُو حَازِمٍ، قَالَ سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ مِنْ أَىِّ شَىْءٍ الْمِنْبَرُ فَقَالَ مَا بَقِيَ بِالنَّاسِ أَعْلَمُ مِنِّي هُوَ مِنْ أَثْلِ الْغَابَةِ، عَمِلَهُ فُلاَنٌ مَوْلَى فُلاَنَةَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ عُمِلَ، وَوُضِعَ، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ كَبَّرَ وَقَامَ النَّاسُ خَلْفَهُ، فَقَرَأَ وَرَكَعَ وَرَكَعَ النَّاسُ خَلْفَهُ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى، فَسَجَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ عَادَ إِلَى الْمِنْبَرِ، ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ رَجَعَ الْقَهْقَرَى حَتَّى سَجَدَ بِالأَرْضِ، فَهَذَا شَأْنُهُ‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ سَأَلَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ـ رَحِمَهُ اللَّهُ ـ عَنْ هَذَا الْحَدِيثِ، قَالَ فَإِنَّمَا أَرَدْتُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ أَعْلَى مِنَ النَّاسِ، فَلاَ بَأْسَ أَنْ يَكُونَ الإِمَامُ أَعْلَى مِنَ النَّاسِ بِهَذَا الْحَدِيثِ‏.‏ قَالَ فَقُلْتُ إِنَّ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ كَانَ يُسْأَلُ عَنْ هَذَا كَثِيرًا فَلَمْ تَسْمَعْهُ مِنْهُ قَالَ لاَ‏.‏
ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்களிடம், "மிம்பர் (சொற்பொழிவு மேடை) எதனால் செய்யப்பட்டது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

"மக்களில் அதைப்பற்றி என்னைவிட நன்கறிந்தவர் (இன்று) யாரும் மீதமில்லை; அது 'அல்காபா' (எனும் காட்டில் வளரும்) 'அத்ல்' மரத்தால் செய்யப்பட்டது. இன்ன பெண்ணின் அடிமையான இன்னார் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்தார். அது செய்யப்பட்டு (பள்ளிவாசலில்) வைக்கப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் மீது ஏறினார்கள். கிப்லாவை முன்னோக்கி 'அல்லாஹு அக்பர்' கூறினார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். பிறகு ஓதினார்கள், ருகூஃ செய்தார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் (ருகூஃ) செய்தார்கள். பிறகு (ருகூஃவிலிருந்து) தமது தலையை உயர்த்தினார்கள். பிறகு புறங்காட்டாமல் பின்னால் நகர்ந்து (மிம்பரிலிருந்து கீழே இறங்கி) தரையில் ஸஜ்தா செய்தார்கள். பிறகு மீண்டும் மிம்பருக்குத் திரும்பினார்கள். பிறகு ஓதினார்கள்; பிறகு ருகூஃ செய்தார்கள்; பிறகு (ருகூஃவிலிருந்து) தமது தலையை உயர்த்தினார்கள். பிறகு புறங்காட்டாமல் பின்னால் நகர்ந்து (மிம்பரிலிருந்து கீழே இறங்கி), தரையில் ஸஜ்தா செய்தார்கள். இதுதான் அந்த மிம்பரின் விஷயமாகும்."

(இந்த ஹதீஸை அறிவிக்கும்) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் குறித்து என்னிடம் கேட்டார்கள். மேலும், 'நபி (ஸல்) அவர்கள் மக்களைவிட உயரமான இடத்தில் இருந்தார்கள் என்பதையே நான் (இதன் மூலம்) நாடினேன். ஆகவே, இந்த ஹதீஸின் அடிப்படையில் இமாம் மக்களைவிட உயரமான இடத்தில் இருப்பதில் தவறில்லை' என்று (அஹ்மத் பின் ஹன்பல்) கூறினார்கள். நான் (அஹ்மத் பின் ஹன்பலிடம்), 'சுஃப்யான் பின் உயைனா அவர்களிடம் இதுபற்றி அதிகமாகக் கேட்கப்படுமே! அவரிடமிருந்து இதை நீங்கள் செவியுறவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'இல்லை' என்று பதிலளித்தார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح