حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلْعَبْدِ الْمَمْلُوكِ الصَّالِحِ أَجْرَانِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ وَالْحَجُّ وَبِرُّ أُمِّي، لأَحْبَبْتُ أَنْ أَمُوتَ وَأَنَا مَمْلُوكٌ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நன்னடத்தையுள்ள ஓர் அடிமைக்கு இரண்டு வெகுமதிகள் உண்டு." (இதனை அறிவித்துவிட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதும், ஹஜ்ஜும், என் தாய்க்கு நன்மை செய்வதும் (ஆகிய இந்தச் சிறந்த அமல்கள்) இல்லாவிட்டால், நான் ஓர் அடிமையாகவே மரணிக்க விரும்பியிருப்பேன்."