இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5462ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ،
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا
فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ غَيِّرُوا هَذَا بِشَىْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ ‏ ‏ ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அபூ குஹாஃபா (ரழி) அவர்கள் (அபூபக்கர் (ரழி) அவர்களின் தந்தை), மக்கா வெற்றியின் நாளில் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு) அழைத்து வரப்பட்டார்கள். அன்னாரது தலையும் தாடியும் தும்பைப்பூவைப் போல் வெண்மையாக இருந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இதை வேறு எதைக் கொண்டாவது (நிறத்தை) மாற்றுங்கள், ஆனால் கருப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح