அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான இடங்கள் (அல்லது ஊர்கள்) அதன் பள்ளிவாசல்களாகும். மேலும், அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான இடங்கள் (அல்லது ஊர்கள்) அதன் சந்தைகளாகும்.