இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2409சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ اللاَّنِيُّ، بِالْكُوفَةِ عَنْ عَبْدِ الرَّحِيمِ، - وَهُوَ ابْنُ سُلَيْمَانَ - عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَنْ صَامَ ثَلاَثَةَ أَيَّامٍ مِنَ الشَّهْرِ فَقَدْ صَامَ الدَّهْرَ كُلَّهُ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ صَدَقَ اللَّهُ فِي كِتَابِهِ ‏{‏ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا ‏}‏ ‏"‏ ‏.‏
அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பவர், காலம் முழுவதும் நோன்பு நோற்றவராவார்.’’
பின்னர் அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ் தனது வேதத்தில் உண்மையையே கூறியுள்ளான்: ‘{மன் ஜாஅ பில்ஹஸனதி ஃபலஹு அஷ்ரு அம்ஸாலிஹா}’ (யார் ஒரு நன்மையைச் செய்கிறாரோ, அவருக்கு அதுபோன்று பத்து மடங்கு நன்மைகள் உண்டு).’’
ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)