حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْتَكِفُ فِي كُلِّ رَمَضَانَ عَشْرَةَ أَيَّامٍ، فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் பத்து நாட்கள் இஃதிகாஃப் மேற்கொள்வார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில், இருபது நாட்கள் இஃதிகாஃபில் தங்கியிருந்தார்கள்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்) ஒவ்வொரு வருடமும் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் குர்ஆனை (ஓதி) சரிபார்த்துக்கொள்வது வழக்கம். ஆனால், நபி (ஸல்) அவர்கள் வஃபாத்தான வருடத்தில், (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்) நபி (ஸல்) அவர்களிடம் இருமுறை அதனை (ஓதி) சரிபார்த்துக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் (ரமலான் மாதத்தில்) பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பது வழக்கம். ஆனால், அவர்கள் வஃபாத்தான வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.